Showing posts with label Articles. Show all posts
Showing posts with label Articles. Show all posts

Tuesday, 19 November 2019

சிறுபான்மை மக்களை ராஜபக்ச தரப்பு எவ்வாறு கவரும்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிறுபான்மை மக்களின் பிரதேசங்களில் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றதனையும், பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதனையும் எல்லோரும் தெளிவாக அறிவர். அடுத்த கட்டமாக ராஜபக்ச தரப்பு சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வ.ர்

தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுண கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, பிரதேச அமைப்பாளர்களுக்கு பாரிய நிதியொதுக்கீடுகளை வழங்குவார்கள். கணிசமான தொழில் வாய்ப்புக்களை வழங்குவார்கள். இதன் மூலம் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேசங்களிலும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியினை அவர்கள் கட்டியெழுப்பலாம் என்று முயற்சிப்பர். SLPP இனருக்கு வெற்றி பெற சிறுபான்மையினரின் ஆதரவு தேவைப்படவில்லை என்று சொன்னாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் யாப்பு சீர்த்திருத்தத்தை ஏற்படுத்த அவர்களுக்கு குறைந்தது மூன்றில் இரண்டு (150/225) பெரும்பான்மை தேவையாகும்.

அதற்காக அவர்கள் மேற்கூறியவாறு சலுகைகளை சிறுபான்மை மக்களுக்கு வழங்கி அவர்களது வாக்குகளையும் அதிகம் பெற்று தனித்து மூன்றிலிரண்டு பலத்தை பெற முயற்சிப்பர். ஆனால் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளால் மாத்திரம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை கணிசமான அளவு கவர முடியுமா என்பது பிரதான கேள்வி. இதற்கு முன்னர் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகள் நிறைவேற்றப்பட்ட போதும் அவர்களின் மூலமாகவே அந்த அரசாங்கம் வெளியேற்றப்பட்ட நிகழ்வு நினைவு கூறத்தக்கது.

முக்கிய காரணம், அந்த அரசாங்கத்தின் காலத்தில் சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானமையே! அத்துடன் கிறிஸ்தவர்களுக்கெதிரான பிரச்சாரங்களும் தாக்குதல்களும் கூட அதே காலப்பிரிவில் சில இடங்களில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

எம்மவர்களும் அவர்கள் பக்கம் கணிசமாக இருக்க வேண்டும் என்ற கருத்து நூறு வீதம் நியாயமானதே. ஆனால்  அது சரணாகதியாக இடம்பெறக் கூடாது. எம்மவர்களுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆளுந்தரப்பு பாரபட்சங்கள் காட்டும் போது அல்லது விசமப்பிரச்சார மதவாத அமைப்புக்களுக்கு நேரடி அனுசரணை வழங்கும் போது, தாக்குதல்களில் அவர்களது மக்கள் பிரதிநிதிகள், பதவிகளில் இருப்பவர்களே நேரடியாக ஈடுபடுவது தெரிந்ததும் மனச்சாட்சியுள்ள எந்த மானிடனும் ஆதரவளிக்க முன் வருவானா?

ஆளும் தரப்பின் பங்குதாரராக, ஆதரவாளர்களாக கணிசமான சிறுபான்மையினர் மாற்றம் பெறுவது ஆட்சியாளர் அவர்களுக்கு அளிக்கும் நியாயமான உரிமைகள், நீதி, பாதுகாப்பிலேயே தங்கியிருக்கிறது.

✍🏻கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்

Saturday, 19 January 2019

கொழும்பு வாழ் சிறுபான்மை மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்

(அஷ்ரப் ஏ சமத் ) 

கொழும்பு வாழ் சிறுபான்மையினா் இலங்கை சுதந்தரமடைந்து இன்று வரை கொழும்பு மாநகர சபையை தோ்தல் வரும்போதெல்லாம் ஐ.தே.கட்சிக்கே ஆட்சியமைப்பதற்கு வாக்களித்து வருகின்றனா். ஆனால் அந்த மாநகர சபையில் 7780 ஊழியா்கள் உள்ளனா் இதில் சிறுபான்மையினங்கள் 1000க்கும் குறைவான ஊழியா்களே சேவையாற்றுகின்றனா். ஏனையவா்கள் கம்பஹா, களுத்துறை கோமகம, மகரகம, அவிசாவளை கேகாலை போன்ற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.
ஆனால் ஆகக் கூடிய வரிகளைச் செலுத்தி இலங்கையில் கூடுதலான வருமானம் கொழும்பு மாநகர சபை பெறப்படுகின்றது. 60க்கும் மேற்பட்ட சிறுபான்மை மாநகர சபை மக்கள் பிரநிதிகள் உள்ளனா். இங்கு சாரதிகள், அலுவலக ஊழியா்கள் கூட பிற மாவட்டத்தினைச் சோ்ந்தவா்கள். பெரும்பான்மையினரே சேவையாற்றுகின்றனா். சிறுபான்மையினா் காலத்துக்கும் காலம் தோ்தலுக்கு மட்டும் வாக்குபோடுபவா்களாகவும் கருவேப்பிலை போன்று சிறுபான்மையினா் இங்கு பாவிக்கப்படுகின்றனா் .
 கொழும்பு வாழ் வருமானம் குறைந்த மக்களது வாழ்க்கைத் தரம் , மிகவும் பின் தங்கியதாகவும் மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்கின்றனா். இச் சமுககங்கள் கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றம் இல்லாமல் உள்ளனா். இங்கு கொழும்பு 7, வெள்ளவத்தை , தெஹிவளையை குறிப்பிடவில்லை - புதுக்கடை, மாளிகாவத்தை, தெமட்டக்கொட, கொட்டேகேன.மட்டக்குழி, மருதானை, வாழைத்தோட்டம், நவம்கம்புர, கிரான்பாஸ் கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு பிரதேசஙக்ளையே அவா்களது வீடமைப்பு, பாடசாலை வசதிகள் தொழில்வாய்ப்பு வசவதிகள் சமமாக கிடைப்பதில்லை.( அமைச்சா் மனோ, முஜிபுரஹ்மான், எஸ்.எம் மரிக்காா், பைசா் முஸ்தபா,(தேசிய பட்டடியல்) ஏ.எச்.எம் பௌசி(தேசிய பட்டியல்) போன்ற மக்கள் பிரநிதிகள் உள்ள்னா் ) ஆனால் அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினருக்கு சமமாகவே கொழும்பிலும் சிறுபான்மைச் சனத்தொகையினா் வாழ்கின்றனா்.
அங்கு 4 சிறுபான்மைச் சமுகம் சாா்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அங்குள்ள மக்கள் காலத்துக்கு காலம் தோ்ந்தெடுக்கின்றனா் கொழும்பிலும் 4 ப.உறுப்பினர்கள் உள்ளனா். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் 12 தேசிய பாடசாலைகளும் மாகாணசபையின் கீழ், 63 பாடசாலைகளும் உள்ளன. சகல கல்விப் பணிப்பாளா்கள் 15 உதவி அரசாங்க அதிபா்கள், சகல வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் சகல அரச உயா் பதவிகள் அனைத்தையும் அந்தச் சமுகம் சாா்ந்தவா்களே. கிராம சேவகா் பதவிகள் கூட அந்தந்த பிரதேசத்தில் வாழ்பவா்களே உள்ளனா்.
ஆனால் கொழும்பில் ஆகக்குறைந்தது ஒரு கிராம சேவகா் கூட சிறுபான்மையினா் கடமையில் இல்லை. கொழும்பில் முஸ்லிம் சமுகத்திற்காக தேசிய பாடசாலை 2 உள்ளன. ஹமித் அல்
ஹுசைனியாவும், முஸ்லிம் மகளிா் கல்லுாாி ஆகும். தமிழ மாணவா்களுக்கு பம்பலப்பிட்டியில் ஹிந்து கல்லுாியும் , பம்பலப்பிட்டி ஹிந்து மகளிா் கல்லுாாியும், கொட்டேஹேன விவேகாநாந்தாவும் மட்டுமே உள்ளன. ஆகவே அதே சனத்தொகை கொண்ட அம்பாறையில் சிறுபான்மையினா்க்கு மட்டும் 12 தேசிய பாடசாலைகள் உள்ளன.
கொழும்பில் இன்னும் 7 தேசிய பாடசாலைகளாவது உருவாக வேண்டும். நாம் காலத்துக்கு காலம் ஐ.தே.கட்சிக்கும் அக் கட்சி சாா்ந்த இனைக் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு மட்டுமே உள்ளோம். எமக்கென உள்ள உரிமைகளை அபிவிருத்திகளை பெற்றெடுக்க தவறிவிட்டோம் , தொழில் வாய்ப்புக்கள், பாடசாலை அரச நிறுவனங்களில் தலைமை அதிகாரிகள் போன்ற வாய்ப்பினை கொழும்பில் பெற ஒரு போதும் நாம் சிந்தித்து இல்லை- வெறுமனமே முச்சக்கர வண்டி ஓட்டுனராகவும் பாதை ஓர வியாபாரிகளாகவுமே உள்ளோம்
நமது எதிா்கால சமுகத்திற்கான அபிவிருததிகள்,தேவைகள் பற்றி நாம் சிந்திப்பதில்லை. நகரங்களில் பெரும்பான்மையினா் தொழில் நிமித்தம் வந்து தமது பிள்ளைகளை கல்விக்காக நகரத்தினை ஆக்கிரமித்துச் செல்கின்றனா் அரச உயா்பதவிகள் உள்னா். பரம்பரை பரம்பரையாக கொழும்பில் வாழ்ந்த நாம் இன்றும் மூலை முடுக்கு வாடகை வீடுகளிலே இன்றும் வாழ்ந்து வருகின்றோம். தோ்தல் காலங்களில் கோசம் போடும் சமுகமாகவும் வாக்குப் போடும் மாடுகளாகவே திகழ்கின்றோம்.