கலாநிதி ஜிப்ரீல் புஆத் ஹத்தாத் அவர்கள் 1960 லெபனான் நாட்டின் பெய்ரூத் நகரிலுள்ள ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்கள். தனது மேற்படிப்புக்காக இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்றார்கள். 1991 ஆம் ஆண்டு நிவ் யோர்க் இல் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது இஸ்லாத்தை ஏற்றார்கள். அதே வருடத்தில் நக்ஷபந்தியா தரீக்காவின் ஆன்மீகத் தலைவராக இருந்த மௌலானா ஷெய்க நாஸிம் அவர்களை சைப்ரசில் சந்தித்தார்கள். பின்னர் ஷெய்க் ஹிஷாம் கப்பானி அவர்களையும் சந்தித்து ஆன்மீக வழிகாட்டலைப் பெற்றார்கள்.
சுமார் ஒரு தசாப்தகாலமாக டமஸ்கஸில் ஷெய்க் நூருல் தீன், ஷெய்க் ஆதிப் கல்லாஸ், ஷெய்க் முஹம்மத் அல் யாகூபி, கலாநிதி சமெர் அல் நாஸ் போன்ற பல்வேறு அறிஞர்களிடம் கற்றார்கள்.
தற்போது இவர் சன்மார்க்க அறிஞராக, எழுத்தாளராக, அரபு மொழிபெயர்ப்பாளராக உள்ளார்கள். மற்றும் 2012 இல் வெளியான உலகின் தலை சிறந்த முஸ்லிம்களிலும் உள்ளார்கள். அத்துடன் உலகெங்கும் வாழும் 150 இற்கும் மேற்பட்ட அறிஞர்களிடம் இஜாஸா எனப்படும் கற்பித்தலுக்கான அனுமதியையும் பெற்றுள்ளார்கள்.
கலாநிதி ஜிப்ரீல் புஆத் ஹத்தாத் அவர்கள் பல்வேறு புத்தகங்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்கள். அண்மையில் வெளிவந்த புத்தகம் “The Muhammadan Light In the Qur’an, Sunnah and Companion reports." என்பதாகும். அவருடைய புத்தகங்களின் பட்டியலைwww.livingislam.org. என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.
தற்போது ஷெய்க் அவர்கள் தனது குடும்பத்துடன் புரூணையில் வசித்து வருகிறார்கள். அங்கு இருக்கும் இஸ்லாமிய கற்கைகளுக்கான உமர் சுல்தான் உமர் அலி சைபுத்தீன் நிறுவனம் - புரூணை தாருஸ்ஸலாம் பல்கலைக்கழகம் இல் வருகை தரு விரிவுரையாளராக உள்ளார்கள்.