Thursday, 24 January 2019

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை


12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 கூடியபோது அவர் இதனைத் தெரிவித்தார். 

பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட பொழுதிலும், மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட வில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அதே போல பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவையும் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

அரச தகவல் திணைக்களம்

Saturday, 19 January 2019

நுவரெலியா மாவட்டத்திலும் சோளத்தில் சேனா கம்பளி புளுக்கள்

நுவரெலியா மாவட்டத்தில் முதல் தடவையாக சோலத்தில் சேனா கம்பளி புளுக்கள் இருப்பதை ஹட்டன் ருவான்புற பகுதியில் இனங்கானபட்டுள்ளது. 

இந்த சம்பவம் சனிக்கிழமை (19) பிரதேச மக்களால் இனங்கானபட்டுள்ளதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர். 

ஹட்டன் ருவன் புறபகுதியில் உள்ள மக்கள் தேயிலை, மரக்கரி போன்ற விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த பகுயிதியில் சோளத்தின் விதையில் புளுக்களின் முட்டைகள் பிரதேசமக்களால் இனங்காணபட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளர். 

இதுபோன்ற புளுக்கள் பரவினால் தேயிலை மற்றும் விவசாய பயிர்செய்கைக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவ்வாறான ஒரு நிலமை தொடருமானால் தமது நாளாந்த பயிர்செய்கை தொழிலை மேற்கொள்ள முடியாமல் நேரிடும் எனவும் ருவன்புற பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

இதேவேளை குறித்த பகுதியில் காணபட்ட சோள பயிர்களை பிரதேச மக்கள் தீயிட்டு கொழுத்தியுள்மை குறிப்பிடதக்கது. 

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

கொழும்பு வாழ் சிறுபான்மை மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்

(அஷ்ரப் ஏ சமத் ) 

கொழும்பு வாழ் சிறுபான்மையினா் இலங்கை சுதந்தரமடைந்து இன்று வரை கொழும்பு மாநகர சபையை தோ்தல் வரும்போதெல்லாம் ஐ.தே.கட்சிக்கே ஆட்சியமைப்பதற்கு வாக்களித்து வருகின்றனா். ஆனால் அந்த மாநகர சபையில் 7780 ஊழியா்கள் உள்ளனா் இதில் சிறுபான்மையினங்கள் 1000க்கும் குறைவான ஊழியா்களே சேவையாற்றுகின்றனா். ஏனையவா்கள் கம்பஹா, களுத்துறை கோமகம, மகரகம, அவிசாவளை கேகாலை போன்ற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.
ஆனால் ஆகக் கூடிய வரிகளைச் செலுத்தி இலங்கையில் கூடுதலான வருமானம் கொழும்பு மாநகர சபை பெறப்படுகின்றது. 60க்கும் மேற்பட்ட சிறுபான்மை மாநகர சபை மக்கள் பிரநிதிகள் உள்ளனா். இங்கு சாரதிகள், அலுவலக ஊழியா்கள் கூட பிற மாவட்டத்தினைச் சோ்ந்தவா்கள். பெரும்பான்மையினரே சேவையாற்றுகின்றனா். சிறுபான்மையினா் காலத்துக்கும் காலம் தோ்தலுக்கு மட்டும் வாக்குபோடுபவா்களாகவும் கருவேப்பிலை போன்று சிறுபான்மையினா் இங்கு பாவிக்கப்படுகின்றனா் .
 கொழும்பு வாழ் வருமானம் குறைந்த மக்களது வாழ்க்கைத் தரம் , மிகவும் பின் தங்கியதாகவும் மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்கின்றனா். இச் சமுககங்கள் கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றம் இல்லாமல் உள்ளனா். இங்கு கொழும்பு 7, வெள்ளவத்தை , தெஹிவளையை குறிப்பிடவில்லை - புதுக்கடை, மாளிகாவத்தை, தெமட்டக்கொட, கொட்டேகேன.மட்டக்குழி, மருதானை, வாழைத்தோட்டம், நவம்கம்புர, கிரான்பாஸ் கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு பிரதேசஙக்ளையே அவா்களது வீடமைப்பு, பாடசாலை வசதிகள் தொழில்வாய்ப்பு வசவதிகள் சமமாக கிடைப்பதில்லை.( அமைச்சா் மனோ, முஜிபுரஹ்மான், எஸ்.எம் மரிக்காா், பைசா் முஸ்தபா,(தேசிய பட்டடியல்) ஏ.எச்.எம் பௌசி(தேசிய பட்டியல்) போன்ற மக்கள் பிரநிதிகள் உள்ள்னா் ) ஆனால் அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினருக்கு சமமாகவே கொழும்பிலும் சிறுபான்மைச் சனத்தொகையினா் வாழ்கின்றனா்.
அங்கு 4 சிறுபான்மைச் சமுகம் சாா்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அங்குள்ள மக்கள் காலத்துக்கு காலம் தோ்ந்தெடுக்கின்றனா் கொழும்பிலும் 4 ப.உறுப்பினர்கள் உள்ளனா். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் 12 தேசிய பாடசாலைகளும் மாகாணசபையின் கீழ், 63 பாடசாலைகளும் உள்ளன. சகல கல்விப் பணிப்பாளா்கள் 15 உதவி அரசாங்க அதிபா்கள், சகல வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் சகல அரச உயா் பதவிகள் அனைத்தையும் அந்தச் சமுகம் சாா்ந்தவா்களே. கிராம சேவகா் பதவிகள் கூட அந்தந்த பிரதேசத்தில் வாழ்பவா்களே உள்ளனா்.
ஆனால் கொழும்பில் ஆகக்குறைந்தது ஒரு கிராம சேவகா் கூட சிறுபான்மையினா் கடமையில் இல்லை. கொழும்பில் முஸ்லிம் சமுகத்திற்காக தேசிய பாடசாலை 2 உள்ளன. ஹமித் அல்
ஹுசைனியாவும், முஸ்லிம் மகளிா் கல்லுாாி ஆகும். தமிழ மாணவா்களுக்கு பம்பலப்பிட்டியில் ஹிந்து கல்லுாியும் , பம்பலப்பிட்டி ஹிந்து மகளிா் கல்லுாாியும், கொட்டேஹேன விவேகாநாந்தாவும் மட்டுமே உள்ளன. ஆகவே அதே சனத்தொகை கொண்ட அம்பாறையில் சிறுபான்மையினா்க்கு மட்டும் 12 தேசிய பாடசாலைகள் உள்ளன.
கொழும்பில் இன்னும் 7 தேசிய பாடசாலைகளாவது உருவாக வேண்டும். நாம் காலத்துக்கு காலம் ஐ.தே.கட்சிக்கும் அக் கட்சி சாா்ந்த இனைக் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு மட்டுமே உள்ளோம். எமக்கென உள்ள உரிமைகளை அபிவிருத்திகளை பெற்றெடுக்க தவறிவிட்டோம் , தொழில் வாய்ப்புக்கள், பாடசாலை அரச நிறுவனங்களில் தலைமை அதிகாரிகள் போன்ற வாய்ப்பினை கொழும்பில் பெற ஒரு போதும் நாம் சிந்தித்து இல்லை- வெறுமனமே முச்சக்கர வண்டி ஓட்டுனராகவும் பாதை ஓர வியாபாரிகளாகவுமே உள்ளோம்
நமது எதிா்கால சமுகத்திற்கான அபிவிருததிகள்,தேவைகள் பற்றி நாம் சிந்திப்பதில்லை. நகரங்களில் பெரும்பான்மையினா் தொழில் நிமித்தம் வந்து தமது பிள்ளைகளை கல்விக்காக நகரத்தினை ஆக்கிரமித்துச் செல்கின்றனா் அரச உயா்பதவிகள் உள்னா். பரம்பரை பரம்பரையாக கொழும்பில் வாழ்ந்த நாம் இன்றும் மூலை முடுக்கு வாடகை வீடுகளிலே இன்றும் வாழ்ந்து வருகின்றோம். தோ்தல் காலங்களில் கோசம் போடும் சமுகமாகவும் வாக்குப் போடும் மாடுகளாகவே திகழ்கின்றோம்.

Tuesday, 15 January 2019

நாடளாவிய SLIATE நிறுவனங்களின் பணிப்பாளர்கள் உயர்கல்வி அமைச்சரை சந்தித்தனர்


நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் (SLIATE) பணிப்பாளர்கள் நேற்று (14) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை அமைச்சில் சந்தித்து, SLIATE கல்வி நிறுவனத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

දිවයින පුරා ඇති ශ්‍රී ලංකා උසස් තාක්ෂණ අධ්‍යාපන ආයතනයේ (SLIATE) අධ්‍යක්ෂවරුන් අද දින (14) ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රස් නායක, නගර සැලසුම්, ජලසම්පාදන හා උසස් අධ්‍යාපන අමාත්‍ය රවුෆ් හකීම් මහතාව අමාත්‍යාංශයේ දී හමුවී, (SLIATE) අධ්‍යාපන ආයතනයේ පවතින ගැටළු පිළිබඳව සාකච්ඡා කළේය.


Monday, 7 January 2019

கஹட்டோவிட்ட பத்ரியாவில் கல்வியை தொடரும் வறிய மாணவர்களுக்கு 2001 O/L Batch இனால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலத்தில் 2001 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரம் எழுதி வெளியாகிய மாணவர்கள் தாம் கற்ற  பாடசாலையில் தற்போது கற்கின்ற வறிய மாணவர்களுக்காக அண்மையில்
சுமார் 1 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அவர்களது சேவையை அதிபர் பெரிதும் பாராட்டுகிறார்.