ராக்பெல்லரும் கவலையும்
அவரோ
கோடி செல்வந்தர். தனது கடின உழைப்பின் காரணமாக அவர் கோடானு கோடி சொத்து
சேகரித்து வைத்திருந்தார். ஆனால் அவருக்கு ஒரு தீராத நோய் ஏற்பட்டது. பலன் என்ன ? அவர் படுத்த படுக்கையில் இருந்தார். காரணம் என்ன ? அவரது பண ஆசை. அவருக்கு பணம் சம்பாதிப்பதை தவிர வேறு எதிலும் கவனம் செல்லவில்லை.
பிறர் நலனில் அக்கறை செலுத்தமாட்டார். நண்பர்களுடன் அதிகம் பழகவும் மாட்டார். ஏன்? பண ஆசையும் வறட்டு கௌரவமும்.
ஒருமுறை அவர் பல கோடி பெறுமதியான சாமான்களை கப்பலில் ஏற்றி வியாபாரதிற்காக அனுப்பினார். ஆனால் அவர் இன்ஷூர் செய்யவில்லை. காரணம் இன்ஷூர் செய்து ஏன் வீணாக 10 000 டொலரை இழக்க வேண்டும் என்று. என்றாலும் அன்று இரவு ஒரு புயல் வீசியது. எல்லாம் ஒரே கொந்தளிப்பு. ராக்பெள்ளருக்கோ கை, கால் ஓடவில்லை. இரவு முழுக்க தூக்கமில்லை. பல கோடி பெறுமதியான பொருள் நட்டம் வந்தால்? இன்ஷூர் வேறு செய்யவில்லை.உடனே அவசரமாக இன்ஷூர் கம்பனிக்கு போன் பண்ணி இன்ஷூர் செய்துகொண்டார். ஆனால் மறுநாள் காலை செய்தி வந்தது, கப்பல் பாதுகாப்பாக கரை சேர்ந்தது என்று. நீங்கள் நினைக்கலாம் அவருக்கு போன உயிர் திரும்பி வந்திருக்கும் என்று. எங்கே வந்தது? இன்ஷூர் செய்த 10 000 டொலரும் வீணாகி விட்டது என்று.
No comments:
Post a Comment