Sunday 10 May 2015

கலாநிதி தீன் முஹம்மத் (அல் அஸ்ஹரி)

ஈழத்து மண்ணில் உதித்த தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரும் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் முதலாவது அரபி அல்லாத முஸ்லிம் விரிவுரையாளருமான,
கலாநிதி தீன் முஹம்மத் (அல் அஸ்ஹரி)
கலாநிதி தீன் முஹம்மத் அவர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அக்கரைப்பற்றில் 1956 ஆம் ஆண்டு பிறந்தார்கள். 1972 ஆம் ஆண்டு கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியில் ஆலிம் கற்கையைப் பூர்த்தி செய்தார்கள். பின்னர் எகிப்தில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்கள். தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை இறைக் காதல் எனும் தலைப்பில் சமர்ப்பித்தார்கள்.
கலாநிதி தீன் முஹம்மத் அவர்கள் 1988 ஆம் ஆண்டு அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக வரலாற்றில் அரபு அல்லாத முஸ்லிம் ஒருவர் விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.
இவர்கள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்கள். உலகப்புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்திலும் இவர்கள் உரையாற்றியுள்ளார்கள். தற்போது கட்டார் சர்வதேச பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பீடத்தின் துணைப்பீடாதிபதியாகக் கடமையாற்றி வருகிறார்கள். இவர்கள் எழுதிய இஸ்லாமிய சிந்தனை என்ற நூல் துருக்கி மொழியிலும் வெளியானமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இஸ்லாத்திற்காக சேவை செய்து வரும் கலாநிதி தீன் முஹம்மத் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்குவானாக.
நன்றி : பஸ்ஹான் நவாஸ்

No comments:

Post a Comment