Sunday 3 May 2015

கலாநிதி ஷெய்க் முஸ்தபா செரிக் (பொஸ்னியாவின் முன்னால் தலைமை முப்தி)


ஷெய்க் முஸ்தபா செரிக் அவர்கள் 1952 பெப்ரவரி 05 இல் யூகொஸ்லாவியா நாட்டில் பிறந்தார்கள். ஆரம்பத்தில் பொஸ்னியா நாட்டிலுள்ள சாரஜிவோ இல் உள்ள பாடசாலையில் கல்வி பயின்று பின்னர் புலமைப் பரிசில் பெற்று எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழத்திற்கு சென்றார்கள். அங்கு கல்வியை முடித்த பின்னர் நாடு திரும்பினார்கள்.

1981 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இஸ்லாமிய கலாசார நிலையத்தின் இமாமாக பொறுப்பேற்றார்கள். பல வருடங்கள் அமெரிக்காவிலேயே வாழ்ந்தார்கள். பின்னர் அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கற்கை துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றார்கள். பின்னர் மீண்டும் யூகொஸ்லாவியா திரும்பினார்கள்.

அங்கு பொஸ்னியாவின் இஸ்லாமிய சமூக மன்றத்தின் 
(Islamic Community of Bosnia and Herzegovina) தலைமைப் பொறுப்பை ஏற்றார்கள். இந்த அமைப்பின் தலைவராக 1993 முதல் 1999 வரை இவர்களே இருந்தார்கள். பின்னர் 1999 ஆம் ஆண்டு பொஸ்னியாவின் தலைமை முப்தியாக நியமிக்கப்பட்டார்கள். 

2008 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பிரதமர் டொனி பிளேயரின் அழைப்பை ஏற்று அங்கு இருக்கும் "டொனி பிளேயர் நம்பிக்கையாளர் மன்றம்" இன் ஆலோசனை சபையில் அங்கத்துவம் பெற்றார்கள்.

கலாநிதி முஸ்தபா செரிக் அவர்கள் பொஸ்னியாவின் விஞ்ஞானம் மற்றும் கலைத்துறைக்கான கற்கை நிலையத்தின் நிறுவனர்களிலும் ஒருவராவார்கள். மற்றும் ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய பேரவை, இஸ்லாமிய கற்கைகளுக்கான அஹ்லுல் பைத் மன்றம், யுனெஸ்கொ போன்றவற்றில் அங்கத்துவமும் வகிக்கிறார்கள்.

2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களில் கலாநிதி முஸ்தபா செரிக் அவர்கள் 46 ஆம் இடத்திலுள்ளார்கள்.

கலாநிதி ஷெய்க் முஸ்தபா செரிக் அவர்களின் சில வெளியீடுகள்: 

- Roots of Synthetic Theology in Islam 
- A Choice Between War and Peace 
- A Declaration of European Muslims 
- The challenge of a single Muslim authority in Europe 

No comments:

Post a Comment